×

சித்தூரில் 10 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த மர்மநபர்

சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பி.கொத்தகோட்டா மண்டலம் கட்டு கிராமத்தை சேர்ந்த சீத்தாரெட்டி - உஷா ராணி தம்பதியினருக்கு 3 மகள்கள் உள்ளனர்.  சித்தா ரெட்டி - உஷாராணி தம்பதியினர் தங்களது மூன்றாவது மகள் வர்ஷினியுடன் தம்பள்ளப்பள்ளி தாலுக்கா குரபாலகோட்டா மண்டலம் அனகல்லு கிராமத்தில் உள்ள என்.என்.ஆர். திருமண மண்டபத்தில் நடைபெற்ற உறவினர்கள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று மாலை சென்றனர்.  இந்நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு வர்ஷினி காணாமல் போனார். திருமண மண்டபம் மற்றும் அதனை சுற்றி பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் இன்று காலை 6 மணிக்கு திருமண மண்டபத்தின் பின்புறம் வர்ஷினி உடலில் பல இடங்களில் காயங்களுடன் சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து குரபாலகோட்டா போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அங்கு வந்த போலீசார் திருமண மண்டபம் அதனை சுற்றியுள்ள பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் ஆதாரமாக வர்ஷினியை கடத்திச் செல்லப்பட்ட நபரை தேடி வருகின்றனர். வர்ஷினி உடலில் பல இடங்களில் இரத்த காயம் ஏற்பட்டுள்ளதால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சிசிடிவி கேமராவில் பதிவான மர்ம நபர் வர்ஷினியை அழைத்துச் சென்ற மர்ம நபரின்  புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

Tags : Myrmanabar ,Chittoor Andhra , Andhra, Chittoor, 10-year-old girl murdered, raped
× RELATED நாமக்கல் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட...