×

20 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு : அடித்து உதைத்து படகுகளையும் பறிமுதல் செய்த ஆந்திர மீனவர்கள்

நாகை: எல்லைத்தாண்டி வந்து மீன்பிடித்ததாக நாகூர் மீனவர்கள் 20 பேரை ஆந்திர மாநில மீனவர்களை சிறைபிடித்துள்ளனர். நாகபட்டினம் மாவட்டம் நாகூரை சேர்ந்த 20 மீனவர்கள் மீனவர்கள் மீன்பிடிக்க கடந்த 8 தினங்களுக்கு முன் கடலுக்கு சென்றனர். இவர்கள் நெல்லூர் மாவட்டம் காவலி கிராம கடல்பகுதியில் மீன்பிடித்த போது நாகூர் மீனவர்கள் படகுகளுடன் சிறைப்பிடிக்கப்பட்டனர். சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை ஆந்திர மீனவர்கள் தாக்கியுள்ளனர். இது குறித்து தகவலறிந்து வந்த அப்பகுதி போலீசார் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை சுமூகமாக நிறைவு பெறாத நிலையில் காயமடைந்த மீனவர்கள் காவலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆந்திர மீனவர்களின் பிடியில் இருந்து தங்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு நாகூர் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்களை அவ்வப்போது இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், விரட்டியடிப்பது தொடர் நிகழ்வாக நடந்தேறி வருகிறது. மேலும் படகுகளையும் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்வர். ஆனால் தமிழக மீனவர்களை ஆந்திர மீனவர்களை சிறைப்பிடித்து தாக்கிய சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : fishermen ,Andhra ,Nagore ,Nagai ,Tamil Nadu , Nagai, Nagore fishermen, Tamil Nadu fishermen, Andhra fishermen,
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த...