×

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் பெரும்பாலன மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, சேலம், மதுரை, நெல்லை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த 3 நாட்களாக காற்றின் வேகம் இல்லாததால் புகைகள் தரை மட்டத்தில் உள்ளதாக தெரிவித்த வானிலை ஆய்வு மையம், வாகனம், தொழிற்சாலைகளின் புகைகள் தரை மட்டத்தில் உள்ளதால் சென்னை புகை மண்டலமாக காட்சியளிக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றின் வேகம் அதிகரிக்கும் போது படிப்படியாக இயல்பு நிலைக்கும் திரும்பும் என்று தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
 
புல் புல் புயல் தற்போது அதிதீவிர புயலாக மாறி மத்திய மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு மத்திய மேற்கு வங்கக்கடல் மற்கும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

சங்ககிரியில் 12 செ.மீ. மழை

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சங்ககிரியில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டையில் 9 செ.மீ., மணல்மேல்குடி, திருப்புவனத்தில் தலா 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Tags : Chennai, Meteorological Department, Heavy Rain, Rain, Air Pollution
× RELATED ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற...