×

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்; ஓட்டுப்பதிவுக்கான நேரம் பற்றி அரசிதழில் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஓட்டு சீட்டுகள்,  ஓட்டு பதிவுக்கான நேரம் பற்றி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது, அதன்படி காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல ஊராட்சிகளுக்கு நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டின் வண்ணமும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிக்கான வாக்குப்பதிவின் போது வெள்ளை அல்லது நீல நிற வாக்குச்சீட்டு பயன்படுத்தப்பட உள்ளது.

கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவில் பிங்க் வண்ண வாக்குச்சீட்டும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கான வாக்குப்பதிவில் பச்சை நிற வாக்குச்சீட்டும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலில் மஞ்சள் நிற வாக்குச்சீட்டும் பயன்படுத்தப்பட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 9 வேட்பாளர்களுக்கு ஒரு வாக்குச்சீட்டு என்ற வகையில் அச்சிடப்பட உள்ளது. தமிழ் அகர வரிசைப்படி வேட்பாளர்களின் பெயர் அச்சிடப்பட்டு அவரது பெயருக்கு அருகே தேர்தல் சின்னமும் அச்சிடப்பட்டு இருக்கும் என்று தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Elections ,State Election Commission ,Voting , Local Elections, Voting, Public Release, State Election Commission
× RELATED இந்தியாவிலேயே அதிகம் கேரளாவில் தான் இளம் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு