×

2வது டி20 போட்டி: ரோகித் அதிரடியில் வெற்றி வங்கதேசத்தை பந்தாடியது இந்தியா

ராஜ்கோட்: ரோகித் சர்மா அதிரடியில் இந்தியா வங்கதேசத்தை மிரட்டியது. இதையடுத்து 15.4 ஓவர்களிலேயே இந்தியா வங்கதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி ெபற்றது.வங்கதேசத்துடனான முதல் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அதனால் 2வது போட்டியை வெல்லும் முனைப்புடன் நேற்று களமிறங்கிய இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.  தொடரை கைப்பற்றும் முனைப்பில் வங்கதேச அணியிலும் பெரிய மாற்றமின்றி நேற்று களம் கண்டது.
டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் களமிறங்கியது. நன்றாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர்கள் லிட்டன் தாஸ், முகமது நயிம் இணைந்து 5.4 ஓவரில் 50 ரன்னை கடந்தனர். போட்டியின் 6வது ஓவரில் லிட்டன்தாசை அவுட்டாக்கும் வாய்ப்பு ‘நோ பாலால்’ வீணானது.

அதனால் இன்னும் ரன் குவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த இணையில் லிட்டன் தாசை ரன் அவுட்டாக்கினார் ரிஷப் பந்த். அப்போது லிட்டன் தாஸ் 21 பந்துகளில் 29ரன் எடுத்து ஆட்டமிழந்த போது அணியின் ஸ்கோர் 7.2ஓவரில்  60 ரன். வங்கதேசம் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்தது.இரண்டாவதாக களமிறங்கிய இந்திய துணி துவக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ேராகித் சர்மா, ஷிகார் தவான் ஆகியோர் ஆரம்பத்திலேயே வாணவேடிக்கை நிகழ்த்தினர். குறிப்பாக ஷிகார் அமைதி காக்க, ரோகித்தின் ருத்ரதாண்டவம் ஆடினார். ஒரு கட்டத்தில் அவரது ேபட்டிங் ஸ்டிரைக் ரேட் 200 கடந்தது. இந்நிலையில் 6 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 43 பந்தில் 85 ரன் எடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் களமிறங்கிய ஐயர் 23 பந்தில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி அடித்து அசத்தினார். முடிவில் இந்தியா 15.4 ஓவர்களில் 154 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ெபற்றது.அதிரடியாக விளை யாடி 85 ரன்களை குவித்த ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Tags : T20 match ,India ,victory ,Rohit ,Bangladesh , 2nd T20, match, Rohit ,wins , Bangladesh
× RELATED இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில்...