மக்களவை தேர்தல் போல் இல்லாமல் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை கேட்போம்: அதிமுகவுக்கு பிரேமலதா கிடுக்கி பிடி

சென்னை: மக்களவை தேர்தல் போல் இல்லாமல் உள்ளாட்சி தேர்தலில் எங்களது கட்சிக்கு தேவையான இடத்ைத கேட்டு பெறுவோம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார். தேமுதிக ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பிரேமலதா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கூட்டணி தலைமையுடன் பேச தனிக் குழு அமைக்கப்படும். மக்களவை தேர்தலைப் போல் அல்லாமல், இந்த உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு தேவையான கணிசமான சதவிகித இடத்தை கேட்டுள்ளோம். அதை கொடுப்போம் என கூட்டணி தலைமையும் உறுதி அளித்துள்ளது. விஜயகாந்த் முழு உடல் நலத்துடன் உள்ளார். உள்ளாட்சித் தேர்தலுக்காக மாநகராட்சி வாரியாக அவர் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார் என கூறினார். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முழுமூச்சுடன் செயல்பட வேண்டும். அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய பாடுபடவேண்டும் என்பது உள்ளிட்ட  பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertising
Advertising

Related Stories: