மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க உதவும் சக்கர நாற்காலி!!

மாற்றுத்திறனாளிகள் நின்று கொண்டே பயன்படுத்தும் வகையிலான சக்கர நாற்காலியை சென்னை ஐஐடி வடிவமைத்துள்ளது. நின்றவாறு பயணிக்க இது மிகவும் பயனுள்ளதாக அமைந்திருப்பதாக மாற்றுதிறனாளிகள் கூறுகின்றனர்.

Advertising
Advertising

பெரும்பாலும் நடக்க இயலாத மாற்றுதிறனாளிகள் சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனை அடிப்படையாக வைத்து சென்னை ஐஐடி மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் எழுந்து நிற்கும் வகையிலான சக்கர நாற்காலியை வடிவமைத்துள்ளனர். இதனை மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெஹ்லோத் சென்னை தரமணியில் நடைபெற்ற‌ நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினார். மாணவர்கள் வடிவமைத்த சக்கர நாற்காலியை பீனிக்ஸ் ‌என்ற நிறுவனம் தயாரித்து பயனாளிகளுக்கு வழங்கியுள்ளது.இது போன்ற வீல் சேர் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது என்றும் எப்போதும் அமர்ந்து கொண்டே இருக்கிறோம் என்ற எண்ணத்தில் இருந்து மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மாற்றுதிறனாளிகள் கூறுகின்றனர்.

மேலும், குறைந்த விலையில் வீல் சேர் கிடைக்கிறது. வாழ்வில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. ரொம்ப பயனுள்ளதாக வீல் சேர் வடிவமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கின்றனர்.மாற்று திறனாளிகள் பயன்படுத்தும் நோக்கில் இதனை உருவாக்கி இருப்பதாகவும், பல கட்ட சோதனைகளுக்கு பிறகு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் பீனிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சக்கர நாற்காலியை மானிய விலையில் ‌பெற நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெஹ்லோத் தெரிவித்துள்ளார்.

Related Stories: