புர்கினா பாசோ நாட்டில் பேருந்து மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்: 37 பேர் பலி...பலர் கவலைகிடம்

பவுன்கோ: புர்கினா பாசோ நாட்டில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 37 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். புர்கினா பாசோ என்பது மேற்கு  ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதைச் சுற்றிவர ஆறு நாடுகள் உள்ளன. வடக்கே மாலி, கிழக்கே நைஜர், தென்கிழக்கே பெனின், தெற்கே டோகோ  மற்றும் கானா, தென்மேற்கே கோட் டிவார் ஆகிய நாடுகள் சுற்றிவர உள்ளன. இந்நாடு முன்னர் அப்பர் வோல்ட்டா என்ற பெயரில் இருந்தது. 1984-ம்  ஆண்டு அதிபர் தொமஸ் சங்கரா என்பவரால் பெயர் மாற்றப்பட்டது. மோரி, டியோலா மொழிகளில் உயர் மக்களின் நாடு என்று இதற்குப் பொருள்.  1960-ம் ஆண்டு பிரான்சிடம் இருந்து விடுதலை கிடைத்தது.

1970களிலும், 1980களிலும் அரசின் சீரற்ற நிலையில் பல்கட்சித் தேர்தல் 1990களின் ஆரம்பத்தில் இடம்பெற்றது. பல நூற்றுக்கணக்கான  தொழிலாளர்கள் கானா மற்றும் கோட் டிவார் போன்ற அயல் நாடுகளுக்கு ஆண்டுதோறும் தொழில் தேடி இடம்பெயர்ந்து வருகின்றனர். இதற்கிடையே,  கனடாவைச் சேர்ந்த தங்க சுரங்க ஊழியர்கள் பலத்த ராணுவ பாதுகாப்புடன் 5 பேருந்துகளில் பவுன்கோ நகருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது  சாலையில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு ஒன்று திடீரென வெடித்தது.

இதனைத் தொடர்ந்து பேருந்தை நோக்கி தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 60க்கும்  மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால் பலி  எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 37 பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: