×

கர்நாடக பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பெல்லாரி அணியின் கேப்டன் உள்பட 2 வீரர்கள் கைது

கர்நாடகா: கர்நாடக பிரிமீயர் லீக்கில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பெல்லாரி அணியின் கேப்டன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெல்லாரி அணியின் கேப்டன் சி.எம்.கவுதம், அப்ரார் காலிஸை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், பிரிமீயர் லீக் டி-20 போட்டிகள் நடந்து வருகிறன. இதே போல கர்நாடகாவில் பிரீமியர் லீக் என்ற பெயரில் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த 2009-ம் ஆண்டு முதல் நடைபெற்றுவருகிறது. இதுவரை 8 சீசன்களாக நடைபெற்றுள்ளது.

இந்த கிரிக்கெட் தொடரில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தொடரின் இறுதி போட்டியில் பல்லாரி டஸ்கர்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹூப்ளி டைகர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த போட்டியில் பல்லாரி டஸ்கர்ஸ் அணியின் கேபடன் சிஎம் கௌதம் 37 பந்துகளில் வெறும் 29 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இந்நிலையில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக சில கர்நாடக வீரர்கள் மீது புகார் எழுந்தது.

இது தொடர்பாக பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கிரைம் பிரிவு போலீசார், ஜி.எம்.கவுதம், அப்ரார் காஸி ஆகிய கிரிக்கெட் வீரர்களை இன்று காலை கைது செய்துள்ளனர். கவுதம், பெல்லாரி டஸ்கர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார். அப்ரார் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்.இவர்கள் கைது செய்யப்பட்டதை உறுதி செய்துள்ள கூடுதல் கமிஷனர் சந்தீப் பட்டீல், தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என்றும் கூறினார்.

ரஞ்சி வீரர்களான கவுதமும் அப்ராரும் ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடி வருகின்றனர். கவுதம் பெங்களூர், மும்பை இண்டியன்ஸ், டெல்லி அணிகளில் விளையாடி இருக்கிறார். மேட்ச் பிக்சிங் புகாரில் இரு கிரிக்கெட் வீரர்கள் கைது செய்யப்பட்டிருப்பது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : team ,Bellary ,Karnataka Premier League Cricket ,Bellary Team , Karnataka Premier League Cricket, Gambling, Bellary Team, Arrested
× RELATED பெங்களூருவில் ராமேஸ்வரம் கபே...