×

பாண்டா கபே!.. பாண்டா கரடிகள் போன்று மாற்றப்பட்ட நாய்க்குட்டிகள்

நன்றி குங்குமம் முத்தாரம்

மனிதர்களைச் சுலபமாக வசீகரிக்கும் ஓர் உயிரினம் பாண்டா கரடி. அதுவும் குட்டி பாண்டா கரடி என்றால் சொல்லவே வேண்டாம். அதன் தோற்றமும், ரோமமும் அவ்வளவு அழகானது. பார்த்தவுடனே கையில் எடுத்து குழந்தையைப் போல கொஞ்ச தோன்றும். அதனுடன் விளையாட விரும்புவோம்...

விஷயம் இதுவல்ல.கடந்த மாதம் சீனாவின் செங்டு நகரில் ‘க்யூட் பெட் கேம்ஸ்’ என்று பாண்டா கரடிகளுக்கான ஒரு கபேவை ஆரம்பித்தார்கள். ‘பாண்டா கபே’ என்றே அதனை அழைத்தனர். பாண்டா கபே என்ற உடனே பாண்டா கரடி வளர்ச்சிக்கான ஆராய்ச்சி மையம் என்று நினைத்துவிடாதீர்கள்.

ஆறு சவ் சவ் நாய்க்குட்டிகளுக்கு பாண்டா கரடி மாதிரி கருப்பு, வெள்ளை வண்ணமடித்து கபேயில் காட்சிப்படுத்தினர். கபேயில் வேலை செய்பவர் ‘பாண்டாஸ்’ என்ற தலைப்பில் அந்த நாய்க்குட்டிகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்ற, பாண்டா கபே உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டது. செல்லப்பிராணிகளுக்கான உணவு மற்றும் திரவ உணவுகளுடன் டையிங் வசதியும் இங்குண்டு என்று பாண்டா கபே பற்றி விளம்ப ரம்படுத்தினர். ஒரு நாய்க்கு பாண்டா கரடி போல வண்ண மடிக்க சுமார் 30 ஆயிரம் கட்டணம்.

நாய்க்குட் டிக்கு வண்ண மடிக்கும் காட்சியை வீடியோவாக்கி ஃபேஸ்புக்கில் தட்டிவிட, அது வைரலானதோடு பீட்டாவின் காதுக்குப் போய்விட்டது.
‘‘பாண்டா கரடியைக் கொண்டாட நமக்கு பல வழிகள் இருக்கிறது. நாய்க்குட்டிக்கு பெயிண்ட் அடித்தா கொண்டாடணும். இப்படி செல்லப்பிராணிகளைக் கொடுமைப் படுத்துவதை உடனே நிறுத்த வேண்டும்.

டையிங்கில் இருக்கும் வேதிப்பொருட்கள் நாயின் தோல், கண், மூக்கு மற்றும் அதன் உடல் நிலைக்கும் தீங்கை விளைவிப்பவை. பணம் சம்பாதிக்கவும் ஃபேஸ்புக்கில் லைக்கை அள்ளவும் இந்த மாதிரியான பிசினஸில் ஈடுபடுகிறார்கள். மக்கள் இவர்களிடமிருந்து தள்ளி நிற்க வேண்டும்...’’ என்கிறார் ‘பீட்டா’ அமைப்பின் சீனியர் வைஸ் பிரசிடண்ட்டான லிசா.

‘‘நாய் களுக்கு அடிக்கும் பெயிண்ட்டை ஜப்பானில் இருந்து இறக் குமதி செய்கி றோம். அதில் எந்த வேதிப்பொருளும் இல்லை. அதனால் நாய்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. மனிதர்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ளும்போது நாய்களும் ஏன் அழகுபடுத்திக் கொள்ளக்கூடாது...’’ என்று கேள்வியை எழுப்பியுள்ளார் கபேயின் உரிமையாளரான ஹுவாங்.



Tags : Panda Cafe , Panda Cafே, Bears, Puppies
× RELATED ஒன்றிய அரசின் வரியில்லா வர்த்தக...