நாய் போன்ற தோற்றமளிக்கும் அரியவகை விலங்கினம்

ஆஸ்திரேலியாவில் கண்டெடுக்கப்பட்ட குட்டி உயிரினம் நாயா அல்லது நரியா என்று கேள்வி எழுந்த நிலையில் அரியவகை டிங்கோ எனப்படும் காட்டு நாய் வகையை சேர்ந்தது என்பது டிஎன்ஏ சோதனையில் நிரூபணமாகியுள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு விக்டோரியா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நாய் போன்று தோற்றமளிக்கும் வாண்டி என்று பெயரிடப்பட்ட விலங்கின் இனம் குறித்து கண்டறிய டிஎன்ஏ சோதனை செய்யப்பட்டது.

அதில் சாதாரண நாய் என்று கருதப்பட்ட வாண்டி ஆஸ்திரேலியாவின் அரியவகை காட்டு நாய் வகையை சேர்ந்த ஆல்பைன் டிங்கோ இனத்தை சார்ந்தது என்பது நிரூபணமாகியுள்ளது.இது ஆஸ்திரேலியாவை சார்ந்த மூன்று டிங்கோ இனத்தின் ஒரு வகை என்றும், மிகவும் ஆபத்தான விலங்கு என்பதும் தெரிய வந்துள்ளது.Tags : Australia, Rare, Fauna, Dog
× RELATED குடியுரிமை திருத்த சட்டத்துக்கு...