ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு

ஏடன்: ஏமன் நாட்டின் அரசுப் படைகளுக்கு சொந்தமான ராணுவ தளங்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர், ஏராளமானோர் காயமடைந்தனர். ஏமனில் கடலோரத்தில் மோச்சா நகரம் உள்ளது.  ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு முதல் சண்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் மோச்சா நகரில் உள்ள வெவ்வேறு ராணுவ தளங்கள் மீது 4 ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடந்தது. இதில் இரு ஏவுகணைகள் நாட்டின் உணவு பாதுகாப்பு குடோன்களின் மீது விழுந்தது.

Advertising
Advertising

இந்த உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதே நேரத்தில் ஏமன் அரசு படைகளுக்கு ஆதரவாக சவூதி தலைமையினான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்திவருகிறது. இந்த சண்டையால் அங்கு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அந்நாட்டின் மோஷா நகரில் உள்ள அரசு படைகளுக்கு சொந்தமான ராணுவ தளங்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். ஜெயன்ட்ஸ் பிரிகேடியர்ஸ் ராணுவ தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் வெடிகுண்டுகளை ஏற்றி வந்த ஆளில்லா விமான குடியிருப்புகள் மீது விழுந்தன. இதில் 4 பேர் பலியாகிவிட்டனர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஏமன் நாட்டின் பதற்றம் நிலவுகிறது.

Related Stories: