உணவைப் பார்க்கும் விதத்தை மாற்றுங்கள்

நன்றி குங்குமம் முத்தாரம்

Advertising
Advertising

இன்று உடல் பருமன் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அதனால் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பலரும் பல ஆயிரங் களை  செலவு செய்கின்றனர். ‘‘எங்களிடம் வாருங்கள். மூன்றே மாதத்தில் நீங்கள் ஸ்லிம்மாக ஆகிவிடலாம்...’’ என்று தெருவுக்குத் தெரு கூப்பாடு  போடுகின்ற அளவுக்கு ஹெல்த்கேர் நிறுவனங்களும் பெருகிவிட்டன. குறிப்பாக உடல் எடையைக் குறைப்பதற்காக டயட், ரன்னிங், நடைப்பயிற்சி, ஜிம், விளை யாட்டு, யோகா என ஏராளமான வழிமுறைகளை மாதக் கணக்கில் கடைப்பிடிக்கிறோம். இதற்காக தினமும் சில மணி நேரங்களை  ஒதுக்குகிறோம்.  

அத்துடன் எடை குறைப்புக்காக நாம் செய்யும் ஒவ்வொன்றையும் ஃபேஸ்புக்,  இன்ஸ்டா கிராமில் பதிவிட்டு லைக்குகளை அள்ளுகிறோம். ஆனாலும் சிலரைத் தவிர மற்றவர்களுக்கு சரியான ரிசல்ட் கிடைப்பதில்லை. இந்நிலையில், ‘‘உணவைப் பார்க்கும் விதத்தை மாற்றுங்கள். உங்களால் அதிகமாக சாப்பிட முடியும். அதே நேரத்தில் உங்களின் எடையும்  குறையும்...’’ என்று அடித்துச் சொல்கிறது இங்கிலாந்தில் செய்யப்பட்ட சமீபத்திய ஆய்வு. இந்த ஆய்வை மேற்கொண்ட ‘அயன் ட்ரீ’ மருத்துவமனை  500 பேரிடம் உணவு குறித்த சர்வேயை எடுத்திருக்கிறது.

அதென்ன உணவைப் பார்க்கும் விதம்?

உணவுக்கும் மனதுக்கும் நெருங் கிய தொடர்புள்ளது. நவீன வாழ்க்கையின் பரபரப்பில் அவசர அவசரமாக ஒரு  கடமையை நிறைவேற்றுவதைப் போல சாப்பிடுகிறோம். சாப்பிடும் நேரத்தில் கூட மனதை எங்கேயோ அலையவிட்டு பதற்றத்துடன் இருக்கிறோம் அல் லது ஸ்மார்ட்போனைப் பார்த்துக்கொண்டே உணவை உள்ளே தள்ளுகிறோம். நமக்கு பசிக்கவில்லை அல்லது உணவு பிடிக்க வில்லை என்றா லும்  கூட நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்பது எழுதப் படாத ஒரு விதியாகவே ஆகிவிட்டது.

முக்கியமாக சுவையானதை தேடித்தேடி  சாப்பிடு கிறோம். அது உடலுக்கு ஆரோக்கியமானதா என்று கூட பார்ப்பதில்லை. முதலில் இந்தப் பழக்கத்தை மாற்றுங்கள். தியானத்தில் ஈடுபடுவதைப்  போல முழு மனதையும் செலுத்தி உணவை உண்ணுங்கள். ஆரோக்கியமான உணவை தேடிப் பிடித்து சாப்பிடுங்கள். முக்கியமாக, பசிக்கும்போது  மட்டும் சாப்பிடுங்கள். அப்புறம் பாருங்கள், உங்களின் எடை குறைவது மட்டுமல்லாமல் உணவைப் பார்க்கும் விதமே மாறியிருக்கும்.

Related Stories: