தெற்கு சாண்ட்விச் தீவில் கடுமையான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.3-ஆக பதிவு

கிங் எட்வர்ட் பாயிண்ட்: தெற்கு சாண்ட்விச் தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அட்லாண்டிக் கடலின் தென்பகுதியில் அமைந்த தெற்கு சாண்ட்விச் தீவின் கிழக்கில் இன்று அதிகாலை 2.22 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தெற்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டரில் 6.3 ஆக பதிவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் சாலையில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் சுனாமி  எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது அதிர்வை உணர்ந்த மக்கள் பலரும் வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்து சாலையில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தில் வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்தன. நிலநடுக்கத்தை தொடர்ந்து மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. தற்போது நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: