பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் அமெரிக்கா: ஐநா.விடம் அறிக்கை அளித்தது

வாஷிங்டன்:  பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக 188 நாடுகள் ஒன்றிணைந்து பாரிஸ் ஒப்பந்தத்தை உருவாக்கின.  இதன்படி, வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களிடம் உள்ள நிலக்கரி, அனல்மின் நிலையங்களை ஒட்டு மொத்தமாக மூடுவது என்றும், வளரும் நாடுகள் படிப்படியாக மூட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா இருந்தபோது பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் இணைந்தது.  ஆனால், தற்போதைய அதிபர் டிரம்ப்  பாரிஸ் ஒப்பந்தத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார். அமெரிக்காவை பொருளாதார ரீதியாக பின்னுக்கு தள்ளுவதற்காக மேற்கொள்ளப்படும் சர்வதேச சதி என இந்த ஒப்பந்தத்தை அவர் விமர்சித்து இருந்தார். இதனை தொடர்ந்து, கடந்த 2017ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை நேற்று முன்தினம் முதல் அமெரிக்கா தொடங்கியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இதன்படி, வருகிற 2020ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா முழுமையாக வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அமெரிக்கா வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறுகையில், “பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைளை அமெரிக்கா தொடங்கியுள்ளது. இது ெதாடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கை ஐநா.விடம் சமர்பிக்கப்பட்டு உள்ளது. ஒரு ஆண்டில் அமெரிக்கா வெளியேறும்,” என்றார்.

Related Stories: