வாரத்துக்கு 4 நாள் வேலை மைக்ரோசாப்ட் புது திட்டம்: ஊழியர்களின் பணித் திறன், தரம் அதிகரிப்பு

வாஷிங்டன்: ‘வாரத்துக்கு 4 நாட்கள் மட்டும் வேலை செய்தால் போதும்,’ என ஊழியர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் சலுகை அறிவித்துள்ளது.  உலகின் முன்னணி நிறுவனங்களில் மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஒன்று.  வாரத்துக்கு 5 நாட்கள் பணி செய்ய வேண்டும் என்பது ஐடி நிறுவனங்களின் வழக்கம். இந்நிலையில், ஊழியர்களின் வேலை திறனை அதிகரிப்பதற்காக, வாரத்துக்கு 4 நாட்கள் மட்டும் வேலை செய்தால் போதும் என்ற புதிய திட்டத்தை மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. ஊழியர்கள் தங்கள் பணி நேரத்தை தாங்களே நிர்ணயித்துக் கொள்வது, அவர்களின் சொந்த வாழ்க்கைக்கும் நல்லது என்பதை உணர்ந்து இதை செயல்படுத்துவதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

Advertising
Advertising

கடந்த ஆகஸ்டில்தான் மைக்ரோசாப்ட் நிறுவனம், ஒரு குறிப்பிட்ட குழுவை சேர்ந்த 2,300 ஊழியர்களுக்கு மாதம் 5 வெள்ளிகிழமைகள் விடுமுறை அறிவித்தது. இந்த விடுமுறைகள் அனைத்தும் ஊதியத்துடன் வழங்கப்படுகிறது.  இதன் மூலம், ஊழியர்களின் பணித் திறனும், தரமும் 40 சதவீதம் அதிகரித்து உள்ளதாக மைக்ரோசாப்ட்டின் ஜப்பான் கிளை உறுதிபடுத்தியுள்ளது. விடுமுறை, பிடித்த நேரத்தில் வேலை செய்வது போன்ற சலுகைகள், ஊழியர்களின் ‘ஓபி’ அடிக்கும் மனப்பான்மையை தடுத்து உள்ளதாகவும், நேரத்தை கடத்தும் செயலானது 25.4 சதவீதம் குறைந்து உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது. மேலும், மின்சார கட்டணம், காகிதங்கள் பயன்பாடு குறைந்திருப்பது போன்ற நன்மைகளும் இதன் மூலம்  கிடைத்து உள்ளதாகவும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.    

Related Stories: