துருக்கி படையால் கைது செய்யப்பட்ட அபுபக்கர் அல் பாக்தாதியின் சகோதரி படம் வெளியீடு

சிரியா: துருக்கி படையால் கைது செய்யப்பட்டுள்ள ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதியின் சகோதரியின் படம் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து துருக்கி தரப்பில், சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள அலெப்போ மாகாணத்தில் உள்ள அசாஸ் நகரில் ஐஎஸ் தலைவர் அல் பாக்தாதியின் மூத்த சகோதரி ரஸ்மியா அவாத் (64 வயது) வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரஸ்மியா அவாத் திங்கட்கிழமை மாலை துருக்கி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கணவர் மற்றும் 5 குழந்தைகளுடன் வசித்து வரும் ரஸ்மியாவுக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளது. அவரின் கைதின் மூலம் பிற ஐஎஸ் தீவிரவாதிகளைப் பிடிக்கலாம் என கூறப்படுகிறது. ஐஎஸ் தலைவர் பாக்தாதியின் சகோதரியின் கைது தீவிரவாதத்துக்கு எதிரான துருக்கியின் நடவடிக்கைக்கு இன்னொரு உதாரணம் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள ரஸ்மியா அவாத்தின் புகைப்படம் துருக்கி அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, சிரியாவின் வடமேற்குப் பகுதியில் இட்லிப் என்ற இடத்தில் அல் பாக்தாதி பதுங்கியிருப்பதாக அமெரிக்கப் படைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் மறைந்திருந்த கட்டிடத்துக்குள் அதிரடியாகப் புகுந்த அமெரிக்கப் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து பாக்தாதி உயிரிழந்தாது குறிப்பிடத்தக்கது.

Related Stories: