×

பண்டிகையிலும் விற்பனை மந்தம் தங்கம் இறக்குமதி 4வது மாதமாக சரிவு

புதுடெல்லி: தங்கம் இறக்குமதி கடந்த மாதம் 33 சதவீதம் சரிந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து விட்டது. இதனால் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே இந்தியாவிலும் ஆபரண தங்கம் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. தீபாவளி பண்டிகை, தந்தேராஸ் பண்டிகைகளும் கைகொடுக்கவில்லை. இதனால் பண்டிகை சீசனிலும் தங்கம் விற்பனையில் மந்த நிலையே நீடித்தது.

இதனால் தொடர்ந்து 4வது மாதமாக கடந்த அக்டோபரிலும் தங்கம் இறக்குமதி சரிந்துள்ளது. கடந்த மாதம் 38 டன் தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டு அக்டோபரில் இது 57 டன்களாக இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் இறக்குமதி 33 சதவீதம் குறைந்துள்ளது. மதிப்பு அடிப்படையில் கடந்த மாதம் 184 கோடி டாலர் மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : Gold Slowdown , slowdown , festival,Gold,month
× RELATED விளையாட்டு பொருட்கள் விற்பனை சரிவு