×

கேடிஎம் டியூக் 790 ஆரம்பமே அமர்க்களம்

ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவனம் பஜாஜ் கூட்டணியில் இந்தியாவில் வர்த்தகம் செய்து வருகிறது. டியூக் என்ற திறந்தமேனி வகை ஸ்போர்ட்ஸ் பைக்குகள் இந்திய இளைஞர்களை வெகுவாக கவர்ந்துவிட்டன. இதனால், டியூக் வரிசையில் 125, 200, 250, 390 ஆகிய மாடல்களை விற்பனை செய்து வந்தது. டியூக் வரிசையில் மிக சக்தி வாய்ந்த இரட்டை சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடலாக 790 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.கடந்த மாதம் இப்புதிய டியூக் பைக்கை இந்தியாவில் கேடிஎம் நிறுவனம் களமிறக்கியது. ₹8.64 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இப்புதிய பைக் மாடல் வந்துள்ளது. அறிமுகம் செய்த, முதல் 10 நாளில் மட்டும் 41 பைக் விற்பனையானது. இது, கேடிஎம் நிறுவனத்திற்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.அடுத்த ஆண்டு ஏப்ரலில் மேலும் 30 நகரங்களில் இந்த பைக் விற்பனைக்கு கிடைக்கும். இதன் பேரலல் ட்வின் சிலிண்டர் கொண்ட 799 சிசி இன்ஜின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 87 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் முன்புறத்தில் 43 மி.மீ அப்சைடு டவுன் போர்க்குகளும், பின்புறத்தில் முழுவதுமாக அட்ஜெஸ்ட் செய்யும் வசதி கொண்ட மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. அதேபோன்று, முன்புறத்தில் 300 மிமீ டியூவல் டிஸ்க் பிரேக், பின்புறத்தில் 240 மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக் இடம்பெற்றுள்ளது. இந்த பைக்கில் ரெயின், ஸ்ட்ரீட், ஸ்போர்ட்ஸ் மற்றும் டிராக் ஆகிய நான்கு விதமான பயன்பாட்டுக்கு தக்க, டிரைவிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன.
டிராக்க்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், வளைவுகளில் திரும்பும்போது குறிப்பிட்ட அளவுக்கு மேல் சாய்ந்து கீழே விழும் நிலை குறித்து எச்சரிக்கும் வசதி, ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஸ்லிப்பர் கிளட்ச், குயிக் ஷிப்டர் ஆகிய வசதிகளும் உள்ளன. இந்த பைக்கில் முழுமையான டிஎப்டி திரையுடன்கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், எல்இடி லைட் இடம்பெற்றுள்ளன. இந்த பைக்கிற்கு கேடிஎம் பவர்பார்ட்ஸ் என்ற பெயரில் பிரத்யேக ஆக்சஸெரீகள் கொடுக்கப்படுகின்றன.

Tags : KTM , KTM Duke,790, just, beginning
× RELATED புதிய கேடிஎம் டியூக் பைக்குகள்