×

கூடுதல் நீளம் உயரத்தில் ஹோண்டா சிபி ஷைன் 125

ஹோண்டா நிறுவனம் தனது தயாரிப்பு வாகனமாக சிபி ஷைன் 125-ஐ பிஎஸ்6-க்கு அப்டேட் செய்துள்ளது. விரைவில் வெளிவர உள்ள இந்த பைக்கின் இன்ஜின் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 124 சிசி ஹோண்டா சிபி ஷைன் தற்சமயம் 7.58 கிலோவாட்ஸ் (10.31 பிஎஸ்) பவரை வெளிப்படுத்தி வருகிறது. இந்த பைக் தற்போது பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் இனி 7500 ஆர்பிஎம்மில் 8 கிலோவாட்ஸ் (10.88 பிஎஸ்) பவரை வெளிப்படுத்தும்.இப்படி இன்ஜினில் அப்டேட் செய்யப்பட்டுள்ள சிபி ஷைன் 125-ன் பரிமாண தோற்றத்திலும் மாற்றங்கள் நடைபெற்றுள்ளது. இந்த பைக்கின் வீல்பேஸ் 19 மி.மீ. அதிகரிக்கப்பட்டு 1,285 மி.மீ.க்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. நீளம் 8 மி.மீ. அதிகரிக்கப்பட்டு 2,020 மி.மீ. ஆகவும், அகலம் 23 மி.மீ. அதிகரிக்கப்பட்டு 785 மி.மீ. ஆகவும், உயரம் 13 மி.மீ. உயர்ந்து 1,103 மி.மீ. ஆகவும் உள்ளது. சிபி ஷைனின் இன்ஜின், நான்கு வேக நிலைகளை வழங்கக்கூடிய கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மொத்த பைக்கின் எடை 123 கிலோவாக தற்போது உள்ளது. பிஎஸ்6 தரத்திற்கு இந்த பைக் மாற்றப்பட்ட பின்னர் இதில் சிறிய அளவிலான அதிகரிப்பு இருக்கும்.

ஹோண்டா நிறுவனம், சிபி ஷைனை, செல்ப் டிரம் அலாய், செல்ப் டிரம் சிபிஎஸ், டிரம் சிபிஎஸ் லிமிட்டேட் எடிசன், செல்ப் டிஸ்க் அலாய், செல்ப் டிஸ்க் சிபிஎஸ், டிஸ்க் சிபிஎஸ் லிமிட்டேட் எடிசன் போன்ற வேரியண்ட்களில் வழங்கி வருகிறது. மேலும் தனது பிரபலமான மாடல் பைக்குகளுக்கு தீபாவளி சலுகையையும் ஹோண்டா அறிவித்துள்ளது. இந்த மூன்று வேரியண்ட்டை தவிர்த்து, பிரீமியம் ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி மாடல் இந்த பிஎஸ்6 இன்ஜின் மாற்றத்தால் சிறிது அதிகளவிலான ஆற்றலை வெளியிட உள்ளது. தற்சமயம் கொண்டுள்ள 4 வேக நிலைகளுக்கான கியர்பாக்ஸிற்கு பதிலாக 5 வேக நிலைகளுக்கான கியர்பாக்ஸை இந்த வெர்சன் பெறுகிறது. இதில் உள்ள பாகங்கள்தான் அப்படியே பிஎஸ்6-க்கு மாற்றப்பட்டுள்ள, சிபி ஷைன் 125 மாடலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.ஹோண்டா நிறுவனம் சமீபத்தில்தான் பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட ஆக்டிவா 125 மாடல் பைக்கை அறிமுகம் செய்திருந்தது. இந்த அப்டேட் செய்யப்பட்ட ஆக்டிவா முந்தைய மாடலைவிட 7,000 ரூபாய் அதிகமாக இந்திய எக்‌ஷோரூமில் விற்கப்பட்டு வருகிறது. இதைவிட சிபி ஷைன் 125 பிஎஸ்6 மாடலின் விலை சிறிது அதிகமாகவே நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : CB , Extra Length,Height, Honda CB, Shine 125
× RELATED நாங்கள் தலையிடாதவாறு சட்டம் இயற்ற...