×

4 டிஸ்க் பிரேக்குடன் ஹூண்டாய் ஐ20

2020-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிற ஹூண்டாய் ஐ20 காரின் அடுத்த தலைமுறைக்கான மாடல் கார் இந்திய சாலைகளில் சோதனை ஓட்டம் செய்து பார்க்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் நடைபெற்று வரும் இச்சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த நியூ 2020 ஹூண்டாய் ஐ20 கார், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்ட்டர் உள்ளிட்ட அப்டேட்களை கொண்டு வெளிவருகிறது.ஹூண்டாய் ஐ20 மாடலில் நவீன தொழில்நுட்பங்கள் உள்ளன. அவை அப்படியே இந்த நியூ ஐ20 மாடலுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் கூடுதல் அம்சமாக, ஹூண்டாய் வென்யூ காரில் உள்ள ப்ளூலிங் தொழில்நுட்பம், அதாவது இணையதள வசதி இந்த காரிலும் வழங்கப்பட்டுள்ளது.

மிக பெரிய தொடுதிரையாக 8 இன்ச் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் இக்காரில் உள்ளது. பிரேக்கிங் அமைப்பிலும் அப்டேட்டாக நான்கு டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. இன்னொரு மாற்றமாக, 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுக்கு பதிலாக கியா செல்டோஸ் காரில் உள்ளதுபோல் 1.4 லிட்டர் டீசல் இன்ஜினை கொண்டுள்ளது. கியா செல்டோஸ் இன்ஜின் 115 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஆனால், ஐ20 காரின் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் 90 பிஎச்பி பவரைத்தான் வெளிப்படுத்தவல்லது.இந்திய சந்தையில் ஹூண்டாய் ஐ20 மாடல் கார் அறிமுகமானதில் இருந்து சிறந்த முறையில் விற்பனையாகி வருகிறது. இதனால், அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ஐ20 கார் மாடலின் அடுத்த தலைமுறைக்கான காரும் பிரபலமடையும் என ஹூண்டாய் நிறுவனம் நம்புகிறது. இப்புதிய காரின் விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.

Tags : Hyundai , Hyundai, i20 , 4 ,disc brake
× RELATED ஹூண்டாய் மோட்டார் இந்திய தொழிற்சாலையில் 53வது தேசிய பாதுகாப்பு தினவிழா