×

மம்மூத் யானைகள்

நன்றி குங்குமம் முத்தாரம்

எகிப்தில் வீற்றிருக்கும் பழமையான கட்டடங்களையும், பிரமிடுகளையும் கட்டுவதற்கான பொருட்களை எடுத்து வருவதற்கு  மம்மூத் யானைகளைப் பயன்படுத்துவதாக ஒரு வரலாறு உண்டு. இந்த வகையான யானைகள் அழிந்து 4 ஆயிரம் ஆண்டுகள் இருக்கலாம் என்று ரஷ்ய விஞ்ஞானிகள் செய்த ஆய்வு சொல்கிறது. குறிப்பாக காலநிலை மாற்றத்தாலும், குகை மனிதர்களால் வேட்டையாடப்பட்டும் மம்மூத் யானைகள் அழிந்திருக்கின்றன.

இந்த இனத்தின் கடைசி யானை ஆர்க்டிக் கடலில் உள்ள ரேஞ்சல் தீவில் வாழ்ந்திருக்கிறது என்பதற்கான தடயங்கள் இப்போது கிடைத்திருக்கின்றன. பூமியில் வெப்பநிலை குறைந்திருந்த காலத்தில், அதாவது ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து பரவலாக மம்மூத் யானைகள் வாழ்ந்திருக்கின்றன. வெப்பநிலை அதிகரிக்க இவை அழியத்தொடங்கியிருக்கின்றன. உடம்பெங்கும் உல்லன் போர்வையைப் போன்ற இதன் ரோமம்,  நீண்ட தந்தங்கள், பெரிய தோற்றம் மம்மூத் யானைகளை ஹாலிவுட் அனிமேஷன் படங்களில் ஒரு கதாபாத்திரமாகவே மாற்றிவிட்டன.

Tags : Mammoth elephants
× RELATED வால்பாறை அருகே வனத்துறை முகாமை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்