தீபாவளியையொட்டி வரி ஏய்ப்பை தடுக்க இணை ஆணையர்கள் தலைமையில் 10 கண்காணிப்பு குழு அமைப்பு: வணிக வரித்துறை நடவடிக்கை

சென்னை: தீபாவளி பண்டிகை நாளில் வரி செலுத்தாமல் பொருட்கள் மாற்றம் செய்வதால் வணிகவரித்துறைக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. ஏற்கனவே வணிகவரித்துறை வருவாய் பற்றாக்குறையால் தவித்து வரும்  நிலையில் இந்த பிரச்னை தீவிரமாக கவனத்தில் கொண்டு செயல்படுத்த வணிகவரித்துறை கமிஷனர் சோமநாதன் நுண்ணறிவு பிரிவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதன்பேரில் இணை ஆணையர்கள் தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் ₹50 ஆயிரத்திற்கும் மேல் இவே பில் இல்லாமல் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பது குறித்து தீவிரமாக கண்காணித்து  வருகின்றனர்.

இந்த சோதனை வரும் 27ம் தேதி வரை மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்த சோதனையை சென்னை, கோவை உட்பட பெரிய நகரங்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் வணிகவரித்துறையினர் மேற்ெகாள்ள  வேண்டும் என்றும், இதற்காக, மற்ற இடங்களில் இணை ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் தலைமையிலான குழுவினர் செயல்பட வேண்டும் என்றும் வணிகவரித்துறை கமிஷனர் அறிவுரை வழங்கியுள்ளார்.

Related Stories: