×

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு மாணவர்கள், பெற்றோர் உட்பட 8 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

தேனி: நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் கைதான மாணவர்கள் உட்பட 8 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவன் உதித்சூர்யா பிடிபட்டார். இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து சிபிசிஐடி போலீசார், மாணவன்  உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசனை கைது செய்தனர்.

இவர்களைத் தொடர்ந்து ஆள் மாறாட்டம் செய்ததாக சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பிரவீன், ராகுல், இவர்களது தந்தைகள் சரவணன், டேவிட், மாணவி பிரியங்கா அவரது தாய் மைனாவதி  ஆகியோரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கைதான 8 பேர் சார்பில் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனுக்கள், தேனி  மாவட்ட முதன்மை நீதிபதி விஜயா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதி, 8 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி  செய்து உத்தரவிட்டார்.


Tags : NEET recipient ,parents , NEET CHOICE ,CHANGE, Including ,students, parents,dismissed
× RELATED மின்வாரிய ஓய்வு பெற்றோர் போராட்டம்