தீபாவளி பண்டிகையையொட்டி அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னிபஸ்கள் பறிமுதல்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரிக்கை

கரூர்:  தீபாவளி பண்டிகையையொட்டி அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னிபஸ்கள் பறிமுதல் செய்யப்படும் என எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்தார்.கரூர் பேருந்து நிலையத்திலிருந்து 10 குளிர்சாதனம் பொருத்தப்பட்ட பேருந்துகளை போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று இயக்கி வைத்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் குறைந்தபட்ச தூரம் செல்லும் இடங்களில் 3 பிளஸ் 2 இருக்கைகள் கொண்ட குளிர்சாதன பேருந்துகள்  இயக்கப்படவுள்ளன.

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் சிறப்பு பேருந்து கவுன்டர்கள் நாளை (இன்று) துவக்கப்படவுள்ளன. திருப்பூர், கோவை, பெங்களூர் போன்ற பகுதிகளில் இருந்து சொந்த ஊருக்கு வர அந்தந்த இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் சிரமமின்றி ஊருக்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் செய்வதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அந்த பஸ் பறிமுதல் செய்யப்படும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related Stories: