உத்தரகாண்ட் எம்எல்ஏ.க்களிடம் குதிரை பேரம் முன்னாள் முதல்வர் ராவத் மீது எப்ஐஆர்: சிபிஐ நடவடிக்கை

புதுடெல்லி: உத்தரகாண்டில் கடந்த 2016ம் ஆண்டு காங்கிரசை சேர்ந்த ஹரீஷ் ராவத் முதல்வராக இருந்தார். அப்போது, காங்கிரசை சேர்ந்த எம்எல்ஏ.க்கள் சிலர் பாஜ.வில் இணைந்தனர். இதனால், அவருடைய ஆட்சி கவிழ்ந்தது. மாநிலத்தில்  ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.    அதிருப்தி எம்எல்ஏ.க்களின் ஆதரவை மீண்டும் பெறுவதற்காக, 2016ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி முதல்வராக இருந்த ஹரீஷ்  ராவத் பல கோடி ரூபாய் தருவதற்கு தயாராக இருப்பதாக குதிரை பேரத்தில் ஈடுபட்டார். இந்த உரையாடல்  ரகசியமாக பதிவு செய்யப்பட்டு வீடியோவாக வெளியானது.

இந்த குதிரை பேரம் பற்றி சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இது ெதாடர்பான முதல் கட்ட விசாரணையின்போது ஹரீஷ் ராவத், உமேஷ் சர்மாவிடம் சிபிஐ விசாரித்தது. இது குறித்த விவரங்களை உத்தரகாண்ட் உயர்  நீதிமன்றத்தில் சமீபத்தில் சிபிஐ சமர்பித்தது. இதனை ஆய்வு செய்த நீதிமன்றம், ராவத்துக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை (எப்ஐஆர்) பதிவு செய்ய, சிபிஐக்கு அனுமதி அளித்தது. அதன்படி, ராவத் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கையை  பதிவு ெசய்துள்ளது. மேலும், அவரது அமைச்சரவையில் இடம் பெற்ற வரும், பின்னர் பாஜ.வில் இணைந்து தற்போது அமைச்சராக உள்ள ஹராக் சிங் ராவத் மற்றும் நொய்டாவை சேர்ந்த சமாச்சார் பிளஸ் தொலைக்காட்சியின் ஆசிரியர்  உமேஷ் சர்மா பெயர்களும் எப்ஐஆரில் சேர்க்கப்பட்டுள்ளது.

Related Stories: