×

இந்தாண்டு இறுதிக்குள் 14 செயற்கைக்கோள்களை செலுத்த இஸ்‌ரோ திட்டம்

ஸ்ரீஹரிகோட்டா: இந்த ஆண்டு இறுதிக்குள் மூன்று பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 14 சிறிய ரக சர்வதேச செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்‌ரோ திட்டமிட்டுள்ளது.விண்வெளி ஆராய்ச்சியில் சாதனை படைத்து வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, கலாம் சாட்-வி2, மங்கள்யான், சந்திரயான்-1, சந்திரயான்-2 உள்ளிட்ட பல எடை குறைவான செயற்கைக்கோள்கள், விண்கலன்களை மிக  குறைந்த செலவில் செவ்வாய் மற்றும் சந்திரனை ஆராய்வதற்காக விண்ணில் செலுத்தி உள்ளது.

இது தவிர, வணிக ரீதியில் பிற நாடுகளின் செயற்கைக்கோள்களையும் இஸ்‌ரோ  விண்ணில் செலுத்தி வருகிறது. இதற்காக அமைக்கப்பட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான புதிய இந்தியா விண்வெளி நிறுவனம், கடந்த 2017ம்  ஆண்டு 104 செயற்கைக்கோள்களை புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தி சாதனை படைத்துள்ளது.இந்நிலையில், வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பிஎஸ்எல்வி-சி 47, சி-48, சி-49 ஆகிய மூன்று ராக்கெட்டுகள் மூலம் சர்வதேச நாடுகளின் 14 சிறிய ரக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த 14  செயற்கைக்கோள்களும் 4 சர்வதேச நிறுவனங்களுக்கு சொந்தமானவை.


Tags : ISRO , end , year, 14 satellites, ISRO
× RELATED நாளை விண்ணில் பாய்வதாக இருந்த...