சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சீன பட்டாசுகளுக்கு மத்திய அரசு தடை: தண்டனைக்குரிய குற்றம் என எச்சரிக்கை

புதுடெல்லி: மத்திய சுங்கத்துறை முதன்மை ஆணையர் வெளியிட்டள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய பட்டாசு தொழில் நசிவை தடுப்பதற்காகவும், சட்ட விரோத நடவடிக்கையை கட்டுப்படுத்தவும் சீனாவில் இருந்து பட்டாசுகளை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, சீன பட்டாசுகளை கொண்டு சென்றாலோ, மறைத்து  வைத்தாலோ, விற்பனை செய்தாலே, வாங்கினாலோ அல்லது வேறு எந்த வகையில் கையாண்டாலும் அது தண்டனைக்குரிய குற்றமாகும். சீனாவில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை கடத்திக் கொண்டு வருவதும், இந்திய சந்தைகளில் அவற்றை  விற்பனை செய்வதும் கடுமையாக கவனத்தில் கொள்ளப்படும்.சீன பட்டாசுகளில் சிவப்பு ஈயம், காப்பர் ஆக்சைடு, லித்தியம் போன்ற தடை செய்யப்பட்ட ரசாயனங்கள் உள்ளன. இவை ஆபத்தானவை என்பதுடன் சுற்றுச்சூழலுக்கும் எதிரானது. மேலும், அது இந்திய பொருளாதார்த்தை பாதித்து வருகிறது  என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: