சோனியா சந்திப்பு

புதுடெல்லி: சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமாரை சோனியா காந்தி நேற்று சந்தித்தார். கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான சிவக்குமார், சட்ட விரோதமாக பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த செப்டம்பர் 3ம் தேதி அவரை அமலாக்கத் துறை கைது செய்தது. தற்போது, டெல்லி திகார் சிறையில்  சிவக்குமார் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில். சிறையில் உள்ள சிவக்குமாரை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி நேற்று சந்தித்தார். சோனியா காந்தியுடன், காங்கிரஸ் பொதுச் ெசயலாளர் அம்பிகா சோனி, சிவக்குமாரின் சகோதரரும் எம்பி.யுமான சுரேஷ்  உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுரேஷ் கூறுகையில், “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சிவக்குமாருக்கு ஆதரவாக காங்கிரஸ் இருப்பதாக உறுதியளித்தார். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், காங்கிரசை சேர்ந்த தலைவர்களை மத்தியில் உள்ள பாஜ அரசு இதேபோன்று குறிவைத்து தாக்குவதாகவும் அவர் தெரிவித்தார். நாம் போராடுவோம். இதில் இருந்து வெளியே வருவோம்  என்றும் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி தெரிவித்தார்” என்றார். கடந்த சில நாட்களுக்கு முன் ப.சிதம்பரத்தையும் சோனியாகாந்தி சந்தித்து பேசினார்.

Related Stories: