ஆளுநருக்கு சிஆர்பிஎப் பாதுகாப்பு மேற்கு வங்க அரசு கடும் எதிர்ப்பு: முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி கடிதம்

கொல்கத்தா: ‘மேற்கு வங்க ஆளுநரின் பாதுகாப்பை சிஆர்பிஎப்.பிடம் ஒப்படைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,’ என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மேற்கு வங்க அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மேற்கு வங்க கவர்னராக ஜெக்தீப் தன்கர் கடந்த ஜூலை 30ம் தேதி பொறுப்பேற்றார். அவரது பாதுகாப்பை மாநில அரசு நியமிக்கும் போலீசாரே ஏற்பது வழக்கம். இந்நிலையில் கடந்த 15ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட  உத்தரவில், `ஆளுநர் தன்கரின் பாதுகாப்பு, மத்திய ரிசர்வ் போலீஸ் (சிஆர்பிஎப்) படையிடம் ஒப்படைக்கப்படும்,’ என  அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மேற்கு வங்க அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில், ‘ஆளுநரின் பாதுகாப்பை சிஆர்பிஎப்.பிடம் ஒப்படைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும், இந்த முடிவை எடுக்கும் முன்பு  மாநில அரசிடம் ஆலோசனை நடத்தாதது ஏன்? மாநில அரசியலமைப்பின் தலைவர் என்ற முறையில் அவருக்கு பாதுகாப்பு அளிப்பது மாநில அரசின் கடமையாகும். அவருக்கு மாநில அரசு `இசட் பிரிவு’  பாதுகாப்பு வழங்கி வரும் நிலையில்,  மாநில அரசை ஆலோசிக்காமல் திடீரென அதை சிஆர்பிஎப்.பிடம் ஒப்படைத்தது ஏன்? என விளக்கம் அளிக்க வேண்டும். இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

 இது தொடர்பாக, மாநில போலீசின் மூத்த அதிகாரிகளும், சிஆர்பிஎப் அதிகாரிகளும் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், ஆளுநரின் பாதுகாப்பை சிஅர்பிஎப் ஏற்பதில் சிக்கல் நிலவுகிறது. இதுவரை, ஆளுநரின் பாதுகாப்பை  சிஆர்பிஎப் ஏற்கவில்லை.இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் கூறுகையில், `ஜதாவர் பல்கலைக் கழகத்துக்கு ெசன்ற ஆளுநர் வாகனம் சிறை பிடிக்கப்பட்டதை தொடர்ந்து, மத்திய அமைச்சர் பாபுலால் சுப்ரியோ அவரை மீட்டார். இதையடுத்து, ஆளுநரின்  பாதுகாப்பை இசட்டில் இருந்து இசட் பிளசுக்கு மாற்ற உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது’ என கூறின.

Related Stories: