ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு எதிரொலி சென்னை மக்களுக்கு தினமும் 650 மில்லியன் லிட்டர் குடிநீர்

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதன் எதிரொலியாக, சென்னை மக்களுக்கு நேற்று முதல் நாளொன்றுக்கு 650 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.    சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:  சென்னை நகரின் குடிநீர் வழங்கலை சீராக்க தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் கிருஷ்ணா நீரை வழங்கக் கோரி தமிழக அரசு வலியுறுத்தியது.

அதன் அடிப்படையில், தமிழகத்துக்கு கொடுக்கப்பட வேண்டிய கிருஷ்ணா நதி நீரை உடனடியாக விடுவிக்க ஆந்திர முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி, கண்டலேறு அணை திறக்கப்பட்டு பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.  மேலும், தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், உயர்ந்து வரும் ஏரிகளின் நீர் அளவினை கருத்தில் கொண்டு முதல்வர் அறிவுறுத்தலின்படி, சென்னை நகருக்கு நாளொன்றுக்கு வழங்கப்பட்டு வரும் 525 மில்லியன் லிட்டர் குடிநீரின் அளவு நேற்று முதல் நாளொன்றுக்கு 650 மில்லியன் லிட்டர் அளவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.   இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: