சோலையார் அணை பகுதியில் காட்டு யானைகள் முகாம்: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு

வால்பாறை: வால்பாறை அடுத்து சோலையார் அணை கரையோரம் மித வனப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக வனப்பகுதியை விட்டு வெளியேறி தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பு, சத்துணவு கூடம், ரேஷன் கடைகளை உடைத்து பொருட்களை சூறையாடி அட்டகாசம் செய்து வருகிறது. இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் யானைகள் பகலில் தண்ணீர் நிறைந்த சதுப்பு நிலப்பகுதிகள், ஆறுகள், சிற்றோடைகள், அணைக்கட்டு பகுதிகளில் முகாமிட்டுள்ளன.

இந்த நிலையில் நேற்று 8க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டம், செங்குத்துப்பாறை எஸ்டேட் பகுதியில் சோலையார் அணை கரையோரம் உலா வந்தது. இதை அப்பகுதிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் தொடர்ந்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: