மெட்ரோ ரெயில் பயணத்துக்கு நவீன ஸ்மார்ட் கைக்கடிகாரம் விரைவில் அறிமுகம்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: மெட்ரோ ரெயில் பயணத்துக்கு நவீன ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை மெட்ரோ நிர்வாகம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. ரூ.1,000 செலுத்தி பெற்றுக்கொண்டு எளிதில் பயணம் செய்யலாம். மெட்ரோ ரயில் டிக்கெட், மெட்ரோ கார்டு ரீசார்ஜ் சேவைக்காக காலை நேரங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனை தவிர்த்து பயணிகளுக்கு சுமூகமான மெட்ரோ சேவை வழங்க நிர்வாகம், டைட்டன் வாட்ச் நிறுவனத்துடன் இணைந்து நவீன ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.  முதல் கட்டமாக வண்ணாரப்பேட்டை - விமான நிலையம் வரை பயணிகள் சேவை நடந்து வருகிறது.

தினமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வருகிறார்கள். அதன்படி, சுய விவரங்களுடன் கூடிய ‘சிப்’ பொருத்தப்பட்ட இந்த கைக்கடிகாரத்தை பயணிகள் அணிந்து கொண்டு மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் தடையின்றி செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் விருப்பத்துக்கு ஏற்ப 1000 முதல் 1,500 ரூபாய் வரை பல்வேறு மாடல்களில் இந்த கைக்கடிகாரங்கள் கிடைக்கும் எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. செல்போன் எண்களை போல் இதற்கு ஒரு எண் கொடுக்கப்படும் எனவும், அதனை ரீசார்ஜ் செய்து பயணிகள் பயணிக்க முடியும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: