×

சனிக்கோளில் புதிய வகை புயல் வானியலாளர்கள் கண்டுபுடிப்பு

வானியலாளர்கள் சனியில் ஒரு புதிய வகை புயலைக் கண்டறிந்துள்ளனர். இப்போது வரை, வானியலாளர்கள் இரண்டு வகையான சனி புயல்களை மட்டுமே கண்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. முதல் முறை உருவான புயல் 2,000 கிலோமீட்டர் தொலைவில் இருந்தன. இந்த புயல்கள் சில நாட்களுக்கு பிரகாசமான மேகங்களாகத் தோன்றின. தற்போது, புதிதாகக் காணப்பட்ட புயல் நான்கு நடுத்தர புயல்களின் தொடராக இருந்தது. ஒவ்வொன்றும் பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருந்தன, சுமார் 1.5 வாரங்கள் முதல் ஏழு மாதங்கள் வரை நீடித்ததாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சனி என்பது சூரியனை ஆறாவது கோளாக சுற்றி வருகிறது. அது மட்டுமல்ல, சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்தபடியான பெரிய கோள் சனிதான். சனி என்பது பழங்கால ரோமனிய விவசாயக் கடவுளின் பெயராகும்.

சனிக்கோளின் வானவியல் சின்னம், ரோமானிய விவசாயக் கடவுளின் சின்னமான அரிவாள்தான். இரவு வானில் சூரியக் குடும்பத்தின் 5 உறுப்பினர்களை வெறும் கண்ணால் எந்த கருவியும் இன்றி பார்க்க முடியும். அவைகளில் ஒன்றுதான் சனிக் கோள். நம் மூதாதையர்களும், இதனை வெறும் கண்ணால் பார்த்தனர். கண்ணால் பார்க்கும் கோள்களில் இதுதான் தொலைவில் உள்ளது என்றும் தெரிந்து கொண்டனர். சனிக்கோள் மஞ்சள் நிறத்தில் மின்னாமல் பளிச்சென்று தெரியும். பூமியிருந்து பார்க்கும்போது வானில் தெரியும் கோள்களில் மூன்றாவது பிரகாசமான கோள் சனி. சனிக்கோளை வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே மனிதர்கள் பார்த்து வந்திருக்கின்றனர்.

Tags : Discovery of new types of storm astronomers on Saturday
× RELATED 21ம் தேதி ‘இந்தியா’ கூட்டணி பேரணி;...