வீடு தருவதாகச் சொன்னீர்களே? நாங்கள் ஓட்டு போட்டோம், வீடு எங்கே?: சித்தராமையாவிடம் மூதாட்டி வாக்குவாதம்

பெங்களூரு: வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவிடம், தங்குவதற்கு வீடு கேட்டு, மூதாட்டி வாக்குவாதம் செய்த காட்சி வெளியாகியுள்ளது. கர்நாடகா மாநிலத்தின் தெற்கு மற்றும் வடக்கு  உள் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 5,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக பல பகுதிகளில் சாலைகள் கடும் சேதமடைந்துள்ளன. குறிப்பாக தமிழக - கர்நாடக எல்லை  பகுதியான மாலே மகதீஸ்வரா மலைப் பகுதியில் மண்அரிப்பு காரணமாக சாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பதாமி சுற்றுவட்டாரப் பகுதிகளை கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா பார்வையிட்ட இன்று பார்வையிட்டார். அப்போது பதாமிக்கு அருகே உள்ள கிராமம் ஒன்றில் சித்தராமைய்யா சென்ற  காரை பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள் வழி மறித்து காரை சுற்றி வளைத்தனர். சித்தராமைய்யா அருகே சென்ற மூதாட்டி ஒருவர் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

நாங்கள் உங்களுக்கு ஓட்டளித்தால் எங்களுக்கு வீடு கட்டி தர வேண்டும் என உங்களிடம் கேட்டோம். நீங்களும் கட்டித் தருவதாக வாக்களித்தீர்கள். தற்போது நீங்கள் எங்களின் ஓட்டுக்களை பெற்றுக் கொண்டீர்கள். ஆனால் எங்களுக்கு வீடு  கிடைக்கவில்லை. எங்களுக்கு யார் கட்டித் தருவார்கள்? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு மழுப்பலாக பதிலளித்ததுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்ட சித்தராமைய்யா, போலீசாரை வைத்து கிராம மக்களை அப்புறப்படுத்தி, அங்கிருந்து புறப்பட்டுச்  சென்றார்.

Related Stories: