×

இறக்கை ஹோட்டல்!

நியூயார்க்கில் உள்ள ஜான் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் வீற்றிருக்கிறது டிடபிள்யூஏ ஹோட்டல். கடந்த மே மாதம் திறக்கப்பட்ட இந்த ஹோட்டலில் தங்குவதற்காக பிப்ரவரியிலிருந்தே ரிசர்வேஷன் ஆரம்பித்தது. அப்போது புக் செய்தவர்கள் கூட இன்னும் காத்துக்கிடக்கிறார்கள்.

ஆம்; நவம்பர் வரை ஹோட்டல் ஹவுஸ்ஃபுல். விமானத்தின் இறக்கைகளைப் போல வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ஹோட்டலில் 512 சொகுசு அறைகள், 6 உணவகங்கள், 50 ஆயிரம் சதுர அடியில் மீட்டிங் ஹால் என ஏகப்பட்ட வசதிகள். இதுபோக உலகிலேயே மிகப்பெரிய ஹோட்டல் ஜிம் இங்குதான் உள்ளது.

அதன் பரப்பளவு 10 ஆயிரம் சதுர அடிகள். ஹோட்டல் அறையின் சுவர்களை 4.5 இன்ச் தடிமன் உள்ள கண்ணாடியால் உருவாக்கியிருக்கின்றனர். அதனால் ஏர்போர்ட்டுக்குள்ளேயே இருந்தாலும் விமானச் சத்தம் உள்ளே கேட்காது!

Tags : Propeller Hotel , Propeller Hotel,TWA,Newyork
× RELATED கடல் நீரிலிருந்து பேட்டரி