லண்டனில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்: கண்டெய்னர் லாரியில் 39 சடலங்கள் கண்டுபிடிப்பு

லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டன் அருகே கண்டெய்னர் லாரியில் 39 பேரின் சடலங்களை பிரிட்டிஷ் போலீசார் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிரேய்ஸ் பகுதியில் உள்ள  வாட்டர்கிளேட் இன்டஸ்ட்ரீயல் பூங்காவில் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி குறித்து எஸெக்ஸ் போலீசுக்கு நள்ளிரவில் தகவல் வந்தது. இதன் பேரில் அங்கு சென்ற போலீசார் கண்டெய்னர் லாரியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது லாரியின் கண்டெய்னரில் 39 பேரின் சடலங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை தொடர்ந்து அந்த லாரி பல்கேரியாவில் இருந்து வந்த லாரி எனவும், ஹோலிஹெட் பகுதி வழியாக கடந்த 19ம் தேதி பிரிட்டனுக்குள் நுழைந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக லாரி ஓட்டுநரான வடக்கு அயர்லாந்தை சேர்ந்த 25 வயது இளைஞரை சந்தேகத்தின் பேரில் எஸெக்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 39 உடல்கள் மீட்கப்பட்ட சம்பவத்திற்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், உள்துறை அமைச்சர் பிரித்தி படேல் ஆகியோர் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளனர்.

இந்த விசாரணை குறித்து போலீசார் தெரிவித்ததாவது, இது மிகவும் எதிர்பாராத சம்பவம் என்றும், கிட்டத்தட்ட பலர் தமது உயிரை இழந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டுள்ளதாகவும், கூடிய விரைவில் முழு தகவலையும் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஒரே சமயத்தில் டிரக் கண்டெய்னரில் இருந்து 39 சடலங்கள் மீட்கப்பட்டது பிரிட்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: