சுபஸ்ரீ மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு, மோட்டார் வாகன தீர்ப்பாயத்தை அணுகலாமே? என உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: சுபஸ்ரீ மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு, மோட்டார் வாகன தீர்ப்பாயத்தை அணுகலாமே? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை பள்ளிக்கரணை பகுதியில் செப்டம்பர் 12-ஆம் தேதி பேனர் சரிந்து மேலே விழுந்ததால், நிலைதடுமாறி கீழே விழுந்த நேரத்தில் லாரி ஏறி இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.

இதைத்தொடர்ந்து பேனர் சரிந்து உயிரிழந்த விவகாரத்தில் சுபஸ்ரீயின் தந்தை ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், தமிழக அரசிடம் ரூ 1 கோடி இழப்பீடு பெற்றுத் தரும்படி கோரிக்கை விடுத்திருந்தார். மேலும், சிறப்பு விசாரணைக் குழு அமைக்கவும், பேனர் வைப்பதை தடுக்க கடுமையான சட்டம் கொண்டுவரவும் தன்னுடைய மனுவில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதில் தமிழக அரசு உள்ளிட்ட 4 பேர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுபஸ்ரீ மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு, மோட்டார் வாகன தீர்ப்பாயத்தை அணுகலாமே? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் இந்த வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Related Stories: