ராமநாதபுரம் மாவட்டத்தினர் பசும்பொன் வந்து செல்ல வழித்தடங்கள் அறிவிப்பு

சாயல்குடி : பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவிற்கு பசும்பொன் வந்து செல்லும் உள் மாவட்டத்தினருக்கான வழித்தடங்களை கலெக்டர் வீரராகவராவ் அறிவித்துள்ளார்.கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா வரும் அக்.30ந் தேதி கொண்டாடப்படுகிறது. அவரின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் வந்துசெல்கின்றனர்.

ராமநாதபுரம் உள்மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து வந்து செல்வோருக்கு வழித்தடங்களை கலெக்டர் வீரராகவராவ் நேற்று அறிவித்துள்ளார். ராமேஸ்வரம் பகுதியிலிருந்து வாகனங்களில் வருவோர் பட்டிணம்காத்தான் இசிஆர், பேராவூர் சந்திப்பு, அச்சுந்தன்வயல், சத்திரக்குடி, பரமக்குடி, கமுதக்குடி, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன். தேவிபட்டிணம் பகுதிகளிலிருந்து வாகனங்களில் வருவோர் கோப்பேரிமடம், பேரவூர் சந்திப்பு, அச்சுந்தன்வயல், சத்திரக்குடி, பரமக்குடி, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன்.

 கீழக்கரை பகுதிகளிலிருந்து வாகனங்களில் வருவோர் பட்டிணம்காத்தன் இசிஆர் வழியாக சத்திரக்குடி, பரமக்குடி, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன். சிக்கல் பகுதியினர் சாயல்குடி, கோவிலாங்குளம், கமுதி, பசும்பொன், கன்னிராஜபுரம், செவல்பட்டி பகுதியினர் சாயல்குடி, கோவிலாங்குளம், கமுதி, பசும்பொன். கடலாடி பகுதியினர் முதுகுளத்தூர், பேரையூர், கமுதி, பசும்பொன். காத்தாகுளம், எம். சாலை பகுதியினர் துளுக்கன்குறிச்சி, கடம்பன்குளம், மறவர்தெரு, முதுகுளத்தூர், பேரையூர், கமுதி, பசும்பொன்.

பொசுக்குடி பகுதியினர் வெங்கலகுறிச்சி, வெண்ணீர்வாய்க்கால், முதுகுளத்தூர், பேரையூர், கமுதி, பசும்பொன். இளஞ்செம்பூர் பகுதியினர் முனியன்கோயில் விலக்கு, முதுகுளத்தூர், பேரையூர், கமுதி, பசும்பொன். காக்கூர், புளியங்குடி பகுதியினர் கீழப்பணையடினேந்தல்,வெண்ணீர்வாய்க்கால், முதுகுளத்தூர், கமுதி, பசும்பொன். மேலத்தூவல் பகுதியினர் ஆனைசேரி, அபிராமம், பசும்பொன். முஸ்டக்குறிச்சி பகுதியினர் கமுதி, பசும்பொன். மண்டலமாணிக்கம் பகுதியினர் கமுதி, பசும்பொன். பெருநாழி பகுதியினர் கோவிலாங்குளம், கமுதி, பசும்பொன்.

நயினார்கோயில் பகுதியினா எமனேஸ்வரம், பரமக்குடி, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன். ஆர். எஸ்.மங்கலம் பகுதியினர் சி.கே.மங்களம், சருகனி, காளையார்கோயில், சிவகங்கை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன். திருப்பாலைக்குடி, தொண்டி பகுதியினர் எஸ்.பி.பட்டிணம். திருவாடானை, சி.கே மங்களம், சருகனி, காளையார்கோயில், மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு வந்த அதே வழித்தடத்தில் திரும்பி செல்ல வேண்டும். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 16 இடங்கள் வழியாக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: