பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் விதமாக புகைப்படம் வௌியிட்ட பாகிஸ்தான் பாடகி: நெட்டிசன்கள் தக்க பதிலடி

இஸ்லாமாபாத் :  பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் விதமாக புகைப்படம் பதிவிட்ட பாகிஸ்தான் பாடகிக்கு சமூக வலைதளத்தில் இந்திய நெட்டிசன்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.  பாகிஸ்தான் நாட்டு பாடகியான ரபி பிர்சதா (Rabi Pirzada) என்பவர் தனது உடல் முழுவதும் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு தற்கொலைப்படை தாக்குதலுக்கு தயாராக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன், மோடியை ஹிட்லர் என விமர்சித்து கருத்து பதிவிட்டிருந்தார்.

 இவர் இதனை பதிவிட்ட சிறிது நேரத்திலேயே, இந்திய இணையதள பயன்பாட்டாளர்கள் அவரை கிண்டல் செய்தும், தக்க பதிலடி கொடுக்கும் விதமாகவும் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.  இதில் ஒருவர், இது பாகிஸ்தானின்  தேசிய உடை என்றும், மற்றொருவர் பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தானுக்கு முழு ஆதரவு அளிப்பது இதில் வெட்ட வெளிச்சமாகி உள்ளது எனவும் கருத்து பதிவிட்டுள்ளனர். மேலும் ஒருவர், பாகிஸ்தான் பாரம்பரிய உடையில் அற்புதமாக உள்ளீர்கள் எனவும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இதனை தேசிய உடையாக அறிவிக்கலாம் என கிண்டல் அடித்து பதிவிட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதத்திலும் மிரட்டல்:

இதற்கிடையே, கடந்த செப்டம்பர் மாதம், இதனைபோன்று பிரதமர் மோடியை மிரட்டல் விடுக்கும் விதமாக  யூடியூபில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில்,  அதில், கையில் பாம்புகளுடன் பாடகி ரபி இருந்தார். தரையில் மலைப்பாம்பு, முதலைகளும் காணப்படுகின்றன. காணொலியில், நான் காஷ்மீரத்துப் பெண். காஷ்மீர் மக்களை நீங்கள் துன்புறுத்துகிறீர்கள். இந்தப் பாம்புகள், முதலைகள் மோடிக்கு நான் வழங்கும் பரிசு. சாகத் தயாராக இருங்கள். நரகத்தில் இவர்கள் உங்களுக்கு விருந்தளிப்பார்கள் என்று கூறியுள்ளார்.

பாம்புகளைக் கையில் வைத்துக்கொண்டு காணொலி வெளியிட்டதையடுத்து, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண வனத்துறை அதிகாரிகள் அவருக்கு அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.  ரபிக்கு அபராதம் விதிக்கப்பட்டதையடுத்து, மற்றொரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், இந்தப் பாம்புகள், முதலைகளுடன் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக டி.வி. சேனல்களில் பங்கேற்றுள்ளேன். அப்போதெல்லாம் என்மீது எந்தக் குற்றச்சாட்டும் எழவில்லை. இப்போது, இந்தியப் பிரதமர் மோடியை விமர்சித்துப் பேசியதால் என்னை டார்கெட் செய்கின்றனர்.  இதனால், துரோகமிழைக்கும் பாகிஸ்தானியர்களைக் காட்டிலும் இந்தியர்கள் மேலானவர்கள் என்ற எண்ணமே எனக்குள் ஏற்பட்டுள்ளது. எனக்கு இந்தியர்கள் எதிரிகள் அல்ல... மோடியை மட்டுமே விமர்சித்தேன். பாகிஸ்தானியர்களே நீங்கள் உங்கள் நாட்டை நேசிக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், துரோகமிழைக்காதீர்கள் என்று கூறியிருந்தார்.

Related Stories: