×

இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்ய வேண்டி உள்ளது: இன்னும் 3 வாரத்தில் பிசிசிஐ பொதுக்குழு கூட்டம்: சவுரவ் கங்குலி பேட்டி

மும்பை: மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு தேர்தல் முடிந்த நிலையில், பிசிசிஐ நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவிக்கு கங்குலியை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவரே ஒருமனதாக தேர்வாகியுள்ளார். இதனை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி மற்றும் செயலாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா ஆகியோர் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டது.

அத்துடன் இருவரும் தங்கள் பதவிகளை ஏற்றுக் கொண்டனர். இந்நிலையில் தொடர்ந்து பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பேசினார். அப்போது; பிசிசிஐ தலைவர் பதவி ஏற்றதில் பெருமை அடைவதாக சவுரவ் கங்குலி நெகிழ்ச்சி தெரிவித்தார். மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததை நினைவு கூர்ந்தார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரிய நிதி நிர்வாகம், அடிப்படை கட்டமைப்பு துறையில் மாற்றங்கள் தேவை. பிசிசிஐ நம்பகத்தனையில் சமரசத்துக்கு இடமில்லை.

இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்ய வேண்டி உள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் எந்த விதமான ஊழலுக்கும் இடம் அளிக்க மாட்டோம்.  சாம்பியன்கள் விரைவில் ஓய்வுபெற்றுவிட மாட்டார்கள் என தோனி குறித்து கருத்து தெரிவித்தார். தோனியின் எதிர்காலம் குறித்து இதுவரை அவரிடம் பேசவில்லை. இன்னும் 3 வாரத்தில் பிசிசிஐ பொதுக்குழு கூட்டம் நடைபெறும். மேலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் நாளை சந்தித்து பேச உள்ளதாகவும் கூறினார்.


Tags : General Meeting ,BCCI ,Sourav Ganguly ,Interview ,General Committee Meeting , Indian Cricket Board, BCCI, General Committee Meeting, Sourav Ganguly
× RELATED பெண்களுக்கு எதிரான கொடுமைகளை...