கிரிமினல் குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் மசோதா வாபஸ் : மக்களின் 5 மாத கால போராட்டத்திற்கு பணிந்தது ஹாங்காங் அரசு!

ஹாங்காங்: கிரிமினல் குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கும் சர்ச்சைக்குரிய மசோதா திரும்ப பெறப்பட்டு உள்ளதாக, ஹாங்காங் நாட்டின் முதன்மை செயல் அதிகாரி கேரி லாம் அறிவித்துள்ளார்.

 குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் மசோதா

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங், கடந்த 1997ம் ஆண்டில் விடுதலை பெற்றது. பின்னர் இந்த நாடு சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் ஹாங்காங் இருந்தாலும், அந்நாட்டுக்கென தனி அரசு நிர்வாகம், சட்டங்களை கொண்டுள்ளது. இந்த நிலையில், இந்த நாட்டில் கொலை செய்வது, பாலியல் பலாத்காரம்  உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் நபர்களை சீனாவில் உள்ள அதிகாரிகள் ஒப்படைக்கும்படி கோரிக்கை வைத்தால், ஹாங்காங் அவர்களை ஒப்படைப்பதற்கு வழிவகை செய்யும். இதற்கான சட்ட திருத்த மசோதாவுக்கு ஹாங்காக் முதன்மை செயல் அதிகாரியாக உள்ள கேரி லாம் பரிந்துரை செய்தார்.

4 மாதங்களுக்கு மேலாக தொடரும் போராட்டங்கள்\

இந்த மசோதாவை எதிர்த்து கடந்த ஜூன் மாதம் முதல் ஹாங்காங்கில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்களில் பேரணி நடத்தி வருவதால் ஹாங்காங் திக்குமுக்காடி வருகிறது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தின்போது வன்முறை நிகழ்வுகளும் ஏற்பட்டன. கைதும் செய்யப்பட்டனர்.  4 மாதங்களுக்கு மேலாக போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. இதையடுத்து போராட்டங்கள் வலுப்பெற்றதால் மசோதாவை தற்காலிகமாக ரத்து செய்வதாக ஹாங்காங் தலைவர் கேரி லாம் தெரிவித்தார். ஆனாலும் மசோதாவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று மக்கள் போராடி வருகின்றனர்.

சீனாவுக்கு நாடு கடத்தும் சட்ட முன்வடிவு வாபஸ்

இதுகுறித்து கருத்து கூறிய சீனா, ஹாங்காங்கில் ஏற்றுக்கொள்ள முடியாத வன்முறை நடப்பதாகவும், இது எந்த நாட்டவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதில் வெளிநாட்டுப் படைகளும், சர்வதேச ஊடகங்களும் அரசியல் நெருக்கடியைத் தூண்டுகின்றன’’ என்று குற்றம் சாட்டியிருந்தது. இந்நிலையில் ஹாங்காங்கில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்டமுன் வடிவு வாபஸ் பெறப்பட்டது. சர்ச்சைக்குரிய சட்டமுன் வடிவைத் திரும்பப் பெறுவதாக ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் அறிவித்துள்ளார். 

Related Stories: