×

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 14 பேர் உயிரிழப்பு: 5000 வீடுகள் சேதம்... மீட்பு பணிகள் தீவிரம்

பெங்களூரு: கர்நாடகாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவேரி, பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, யாதகிரி, கதக், தார்வார் உள்பட 12 மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. விஜயாப்புரா மாவட்டத்தில் உள்ள ஆலமட்டி அணைக்கு நீர்வரத்து 2 லட்சம் கனஅடியாக உள்ளது. இதனால் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள், அரசு கட்டிடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

சாலைகள், பாலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முடங்கியது. இந்நிலையில் வருகிற 22-ந்தேதி வரை மிதமானது முதல் கன மழை வரை பரவலாக பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆந்திரா மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வங்க கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அங்கு கடலோஎனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. நெல்லூர் மாவட்டத்தில் உள்ள உதயகிரி நகரில் அதிகபட்சமாக 113 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. விசாகப்பட்டினத்தில் 16 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்நிலையில் தலைநகர் பெங்களூருக்கு ‘ஆரஞ்ச் அலார்ட்’ எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.

கன மழையால் பல மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. பெலகாவி, கடாக், கோப் பாய் மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் கன மழைக்கு 5 பேர் பலியாகினர். அங்கு ஏற்கனவே மழையால் கடந்த 3 நாட்களில் மட்டும் 9 பேர் பலியாகி இருந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 5000 வீடுகள் சேதமாகின.  மேலும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags : Karnataka ,houses , Heavy rains in Karnataka, damage to houses, recovery work, intensity
× RELATED புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை