சீக்கியர்களுக்குரிய புனித தலமான கர்த்தார்புர் குருதுவாரா தொடர்பான ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது

இஸ்லாமாபாத்: சீக்கியர்களுக்குரிய புனித தலமான கர்த்தார்புர் குருதுவாரா தொடர்பான முக்கிய ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது. சீக்கிய சமயத்தை தோற்றுவித்த முதல் குருவான குருநானக் தேவின் 550வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தியாவில் கர்த்தார்ப்புருக்கான பாதையை நவம்பர் 9ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்நிலையில் பாக்கிஸ்தானும் இதனை அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. பஞ்சாப் முதலமைச்சர் அமரேந்தர் சிங் தலைமையில் கர்தார்பூர் யாத்திரை செல்லும் முதல் குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் செல்ல உள்ளதாக உள்துறை அமைச்சக அதிகரிக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அக்குழுவினர் அன்றைய தினமே கர்தார்பூருக்கு சென்று இந்தியா திரும்புவார்கள்.

கர்த்தார்புர் குருதுவாரா தொடர்பாக இந்தியா பாகிஸ்தான் இடையிலான முக்கிய ஒப்பந்தம் நாளை இருநாட்டு எல்லை பகுதியான ஜீரோ பாய்ண்ட்டில் கையெழுத்தாகவுள்ளது. இருநாட்டு அதிகாரிகளும் எல்லை தாண்டாமல் இந்த ஒப்பந்தத்தில் கையேயுத்திட உள்ளனர். பக்தர்களிடம் தலா 1500 கட்டணம் வசூலிக்கும் பாகிஸ்தான் முடிவால் தொடர்ந்து இழுபறி நீடித்து, கையேயுத்து ஒப்பந்தமாவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும் ஒப்பந்தத்தில் கையேயுத்திட பாகிஸ்தான் முன்வந்த போதும் கட்டணத்தை திரும்ப பெறுவதற்கான எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை. கட்டணம் திரும்ப பெறப்பட்டால் அதற்கேற்றவாறு ஒப்பந்தம் மாற்றி அமைக்கப்படும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories: