×

கறம்பக்குடி அடுத்த ரெகுநாதபுரத்தில் மாணவர்களை அச்சுறுத்தும் சிதிலமடைந்த கட்டிடம்

கறம்பக்குடி: கறம்பக்குடி அடுத்த ரெகுநாதபுரத்தில் மாணவர்களை அச்சுறுத்தி வரும் சிதிலமடைந்த பள்ளி கட்டிடத்தில் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரம் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் சுமார் 2000க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக இந்த கிராமத்தில் பல்வேறு பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு உயர் நிலைப்பள்ளி மேல் நிலை பள்ளியாக தொடங்கப்பட்டது இதன் காரணமாக பல பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயன் பெற்றனர். அதன் பிறகு மாணவ-மாணவிகள் நலன்கருதி பெற்றோர்களின் நலன் கருதி கடந்த 2008 ம் ஆண்டு மூன்று மாடிகள் கொண்ட 23 வகுப்பறைகளுடன் கட்டிடம் கட்டப்பட்டது. மாணவ-மாணவிகள் என மொத்தம் 690 பேர் கல்வி பயில்கின்றனர். கடந்த 11 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இத வகுப்பறை கட்டிடத்தில் 12,11,9ம் வகுப்புகள் நடைபெற்றது. தற்போது ஏற்கனவே கடந்த பல மாதங்களாக பழுதடைந்து காணப்படும் இந்த மூன்று அடுக்கு மாடி கொண்ட வகுப்பறை கட்டிடம் தற்போது தொடர் மலையின் காரணமாக கடந்த சில நாட்களாக பெரிதும் பழுதடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் பெரிதும் அச்சத்துடனேயே பள்ளிக்கு சென்று வருகின்றனர். மேலும் குறிப்பாக மேல்மாடி வகுப்பறை கட்டிடம் மிகவும் அதிகமாக பழுதடைந்து காணப்படுவதால் மேல் வகுப்பறையில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் தற்போது வேறு வகுப்பறை கட்டிடத்திற்கு மாற்றப் பட்டுள்ளனர். இருந்தாலும் மற்ற வகுப்பறை கட்டிடம் கட்டிடங்கள் எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து அப்படியே அமுக்கி பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று அச்சத்தில் உள்ளனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் பெற்றோர்கள் பல முறை கோரிக்கை மனு அளித்தும், இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. இது சம்பந்தமாக பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரிடமும் சென்று தொடர்பு கொண்டால் நாங்கள் சாம்பத்தப் பட்ட பள்ளி உயர் அதிகாரிகளிடம் பேசி உள்ளோம். உடனே நடவடிக்கை எடுக்க முயற்சிகள் அனைத்தும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூறினர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து பழுதடைந்து மேற்கூரைகள் பெயர்ந்து. எந்த நேரத்திலும் இடிந்து விழுந்தது ஆபத்தை விளைவிக்கும் நிலையில் உள்ள மூன்று அடுக்கு மாடி வகுப்பறை கட்டடத்தை உடனே அப்புறப் படுத்தி மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் பொது மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : building ,Karambakkudi. School , School building
× RELATED நாகர்கோவிலில் மின்னணு வாக்குப்பதிவு...