×

உள்ளூர் வெங்காயத்திற்கு போட்டியாக குறைந்த விலைக்கு களமிறக்கப்பட்டுள்ள ஆந்திரா மலைவெங்காயம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளூர் வெங்காயத்திற்குப் போட்டியாக குறைந்த விலைக்குக் களமிறக்கப் பட்டுள்ள ஆந்திராவின் மலை வெங்காயத்தால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர். அன்றாடம்  சமையலுக்கு பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயம் விலை பெரம்பலூரில் கிலோ ரூ50க்கு மேல் போனதால் ஆந்திராவின் மலைவெங்காயத் தைக் களமிறக்கியுள்ள வியாபாரிகள் மினி வேன்களில் மைக்செட் கட்டி, பெரம்பலூரில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் விற்கப் படுவதோடு, அனைத்து கிராமங்களிலும் தெருத் தெருவாக விற்கப்படும் சூழல் அதிகரித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் மானாவாரி பயிர்களே அதிகம் சாகுபடி செய்யப்படும் மாவட்டமாகும். தமிழக அளவில் மக்காச்சோளம், பருத்தி, சின்னவெங்காயம் ஆகியவற்றின் சாகுபடியில், பெரம்பலூர் மாவட்டம் தொடர்ந்து 15ஆண்டுகளாக முதலிடம் வகித்து வருகி றது. அதில் சின்ன வெங்காயம் கடந்த ஆண்டில் 7,047ஹெக்டேர், அதாவது 17,406 ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப் பட்டது. இதில் குறிப்பாக ஆலத்தூர் தாலு க்காவில் மிக அதிகமாக 3727ஹெக்டேர் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6மாதங்களில் மட்டும் 6,187 ஏக்கரில்மட்டுமே சாகுபடி நடந்துள்ளது. தொடர்ந்து நடந்து வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தைப் பொருத்தமட்டில் பெரும ளவு சாகுபடி சின்னவெங் காயம், அறுவடைக்குப் பிறகு வயலிலேயே பட்டறை அமைத்துப் பாதுகாக்கப்படுகிறது. இதற்குக் காரணம் அறுவடை சீசன் களில் போட்டி அதிகமிருப் பதால், சில வாரங்கள் கழித்து, நல்ல விலைக்கு விற்கலாம் என்கிற நோக்கில் வயல்களிலேயே 30 அடி நீளத்திற்கு பட்டறை அமைத்து, அதில் வெங்கா யத்தை ரயில்பெட்டிகளைப் போல சுமார் 3அடி உயரத்திற்கு அடுக்கி வைப்பார்கள். மாநிலத்தில் அதிகப்படியாக சாகுபடி செய்யப்பட் டாலும் வெங்காயத்திற்கான விலையை பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளால் நிர்ணயிக்க முடியாதது தான் இப்பகுதி முன் னோடி விவசாயிகளின் நிறைவேறாத ஆசையாக உள்ளது. இங்கிருந்து விற்பனை செய்ய ஏதுவாக செட் டிக்குளம் பகுதியில் தொடங்கப்பட்ட ஏல மையமும் தொடங்கிய ஓராண்டு கழித்து செயல்படாமல் போய் விட்டது. வெங்காயத்தை மதிப்புக் கூட்டப்பட்ட பொரு ளாக மாற்றுவதற்காக தொடங்கப்பட்ட தொழிற்சாலையும் திறப்பு விழாவோடு செயல்பாடின்றிக் கிடக்கிறது. பட்டறை வெங்காயத்திற் கும் பாதிப்பு ஏற்படும் படி தொடர்ந்து பெய்துவரும் பருவ மழைக்கு இடையே சின்ன வெங்காயம் அரசு நடத்தும் உழவர் சந்தையில் கிலோ ரூ36,ரூ44 என விற்கையில், தினசரி காய்கறி மார்கெட்டில் கிலோ ரூ.55, ரூ.60என விற்கப்படுகிறது.

இதே நிலைதான் பெல்லாரி எனப்படும் பெரிய வெங்காயத்திற்கும். பெரிய வெங்காயம் உழவர் சந்தையில் கிலோ ரூ36, ரூ46என விற்கையில் தின சரி காய்கறி மார்கெட்டில் கிலோ ரூ.55, ரூ.60க்கு விற்கப்படுகிறது. சாதாரணமாக சாம்பார், சட்னி வைப்பத்திலிருந்து ஆம்லெட், ஆனியன் தோ சை என அதிகப்படியான  தேவையைக் கொண்டு சமையலில் ஆதிக்கம் செய்துவரும் சின்ன வெங் காயம், பெரிய வெங்காயம் இரண்டுமே அரைசதத்தை க் கடத்து ரூ60க்கு விற்கப்ப டுவதால், ஆந்திரா மலை வெங்காயம் அடிமாட்டு விலைக்குப் பெரம்பலூர் மாவட்டத்தில் கூவிக்கூவி விற்கப்படுகிறது.

Tags : Andhra Pradesh ,field , Onions
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி