தேவாரம் மலையடிவாரத்தில் 2 குட்டிகளுடன் நடமாடும் பெண் யானை

தேவாரம்: தேவாரம் மலையடிவாரத்தில் களமிறங்கியுள்ள பெண் யானை தனது 2 குட்டிகளுடன் கப்பைகளை பிடுங்கி போட்டு துவம்சம் செய்தது. தேவாரம் மலையடிவாரத்தை ஒட்டி உள்ள நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள தென்னை, கப்பை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை கடந்த சில நாட்களாக திரியக்கூடிய யானை, குட்டிகளுடன் நாசப்படுத்தி வருகிறது. பெண் யானை, தனது குட்டிகளுடன் அடர்ந்த வனத்திற்குள் இருந்து கொண்டே இப்போது விவசாய நிலங்களை நாசப்படுத்துவது கடும் அதிருப்தியை விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.

Advertising
Advertising

இதனால் வனத்துறையினர் மீண்டும் களமிறங்கி இதனை விரட்ட வேண்டிய கட்டாயம் உண்டாகி உள்ளது. நேற்று தேவாரம் வட்டஓடை தோட்டத்தில் தாழையூத்து என்ற இடத்தில் புகுந்த காட்டு யானைகள் கப்பை, தக்காளி செடிகளை பிடுங்கி வீசியது. கப்பை கிழங்கு செடிகளை சேதப்படுத்திவிட்டு மீண்டும் அடர்ந்த காட்டிற்குள் சென்றது. இதனால் விவசாயிகள் பீதி தொடர்கதையாகி வருகிறது. விவசாயிகள் கூறுகையில், ‘பெண் யானை, தனது குட்டிகளுடன் செய்யும் அட்டகாசத்தை உடனடியாக தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் உயிர்சேதம் ஆக வாய்ப்பு உள்ளது. எனவே இதனை காடுகளுக்குள் வரவிடாமல் தடுப்பது அவசியம்’ என்றனர்.

Related Stories: