தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் மதரீதியில் மாணவர்களை அணி திரட்டுவதை தடுக்குமாறு கல்வித்துறை உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் மதரீதியில் மாணவர்களை அணி திரட்டுவதை தடுக்குமாறு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்துப்புராணங்கள், இதிகாசங்கள், இந்துத் தலைவர்கள் பற்றிய பிரச்சாரம் பள்ளிகளில் நடப்பதாக அரசுக்கு தகவல் வந்துள்ளது. பள்ளி, கல்லூரிகளில் 10 மாணவர்கள் கொண்ட குழுக்களையும் இந்து மாணவர் முன்னணி அமைத்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்து மாணவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் இந்து மாணவர் முன்னணி குழு அமைந்துள்ளதாக தகவல் பள்ளிக்கல்வித்துறைக்கு கிடைத்துள்ளது. இது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளபட வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கல்வித்துறை துணைச்செயலாளர் எஸ்.வெங்கடேசன் அவரச கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

Advertising
Advertising

அதில் இந்து மாணவர் முன்னணி, இந்து இளைஞர் முன்னணி என்ற பெயரில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களை திரட்டுவதற்காக பள்ளிக்கல்வித்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்து மாணவிகளை லவ் ஜிகாத் என்ற பெயரில் மற்ற மதத்தினர் கலப்பு திருமணம் செய்வதை தடுக்க இந்து அமைப்புகள் முயற்சி. பள்ளி, கல்லூரி மாணவர்களை மதரீதியில் அணி திரட்டுவது கல்வி நிலைய நிர்வாக விதிமுறைக்கு எதிரானது என கூறியுள்ளார். எனவே இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Stories: