×

கல்கி சாமியாரை விசாரிக்க அமலாக்கத்துறை திட்டம்: பண பரிவர்த்தனை மேலாண்மை சட்டத்தின் கீழ் கல்கி சாமியார் மீது நடவடிக்கை எடுக்க முடிவு என தகவல்

டெல்லி: கல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனையின் போது ஏராளமான வெளிநாட்டு கரன்சிகளும் கைப்பற்றப்பட்டதால் கல்கி சாமியாரை அமலாக்கத்துறை விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்கி சாமியாரின் ஆசிரமத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 5 நாட்களாக அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில் அமலாக்கத்துறையினர் தற்போது நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஆசிரமத்திலிருந்து ஏராளமான வெளிநாட்டு கரன்சிகள் கைப்பற்றப்பட்டு இருப்பதே காரணம் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக ஆந்திர மாநிலம் வரதபாளையத்தில் உள்ள கல்கி சாமியாரின் தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான வெளிநாட்டு கரன்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதனுடைய மதிப்பு ரூ.20 கோடி என ஏற்கனவே வருமான வரித்துறை தெரிவித்திருந்தது. இந்த அளவுக்கு சட்ட விரோதமாக வெளிநாட்டு பணத்தை பதுக்கி வைத்திருப்பதே தவறு என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அளவுக்கு அதிகமாக இவ்வாறு வெளிநாட்டு பணத்தை பதுக்கி வைத்திருப்பதன் மூலம் தவறு நடந்திருப்பது உறுதியாகியுள்ளது.

அடுத்தக்கட்டமாக நாங்களும் இது தொடர்பாக விசாரணை நடத்த உள்ளோம் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வெளிநாட்டு பண பரிவர்த்தனை மேலாண்மை சட்டத்தின் கீழ் கல்கி சாமியார் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. செம சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆயத்தமாகி வருகின்றனர் என கூறப்படுகிறது.


Tags : Kalki Samyar ,Enforcement Department ,Inquiry, Enforcement Department , Kalki Samyar, Inquiry, Enforcement Department, Project
× RELATED ஆம் ஆத்மி மேலிடப் பொறுப்பாளர் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை..!!