×

வடகிழக்கு பருவமழை: 4,399 இடங்கள் மழையினால் பாதிக்கப்படக் கூடியவையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது: அமைச்சர் உதயகுமார் பேட்டி

சென்னை: 4,399 இடங்கள் மழையினால் பாதிக்கப்படக்கூடியவையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். தற்போது தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமாக பெய்யத் தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பெரும்பாலான இடங்களில் பெய்து வந்த மழை நேற்று முன்தினம் இரவு முதல் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. அரபிக் கடல், வங்கக் கடல் இரண்டிலும் காற்றழுத்தங்கள் சமமாக உருவாகி ஈரப்பதத்தை உறிஞ்சி காற்றழுத்த தாழ்வுப் பகுதிகளாக மா றியுள்ளது. இதனால், தமிழகம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மிக பலத்த மழை கொட்டித் தீர்த்தது.

மற்ற மாவட்டங்களில் முறையே மிக கன மழை, கனமழை என்று பெய்து வருகிறது. இந்நிலையில் பருவமழை தொடர்பாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை அழிலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; மழைக்கால சவால்களை எதிர்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆய்வு நடத்தினார். 4,399 இடங்கள் மழையினால் பாதிக்கப்படக்கூடியவையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 8,721 கால்நடை மிட்பாளர்களும் தயார் நிலையில் உள்ளனர். 1 லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளதாக மின்சாரத்துறை தெரிவித்துள்ளது. நீர் நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளதால் அதிகளவில் தண்ணீரை தேக்கி வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் 48% தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படும். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக 13 கடலோர மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.


Tags : places ,Udayakumar ,Minister , Monsoon and Minister Udayakumar
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்